பொதுமக்களுக்கு அஞ்சல், தொலைபேசி, மின்னஞ்சல் ஊடாக ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்புகொள்ள சந்தர்ப்பம் - News View

Breaking

Post Top Ad

Sunday, October 18, 2020

பொதுமக்களுக்கு அஞ்சல், தொலைபேசி, மின்னஞ்சல் ஊடாக ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்புகொள்ள சந்தர்ப்பம்

கொவிட்-19 நோய்த் தொற்றை ஒழிப்பதற்காக சுகாதாரத் துறை வழங்கியுள்ள பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு ஏற்ப பொதுமக்களுக்கு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தருதல் மற்றும் அலுவலகத்தில் குறைந்தளவான அலுவலர்கள் சேவையை வழங்குதல் என்பவற்றின் மூலம் ஏற்படும் அசௌகரியங்களை கவனத்திற் கொண்டு, அஞ்சல், தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் ஊடாக முன்வைக்கப்படும் பொதுமக்கள் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு, ஒம்புட்ஸ்மன் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி நிதியத்துடன் பின்வரும் இலக்கங்களின் ஊடாக தொடர்புகொள்ள முடியும்.

ஜனாதிபதி பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு
0114354550/0112354550

தொலைநகல் 
0112348855

ஒம்புட்ஸ்மன் அலுலவகம்
0112338073

ஜனாதிபதி நிதியம் 
0112354354

கிளை எண் 
(4800/4814/4815/4818)

தொலைநகல் - 0112331243

No comments:

Post a Comment

Post Bottom Ad