வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் ஒரு தொகைப் பணத்துடன் பிரதான வியாபாரி கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 28, 2020

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் ஒரு தொகைப் பணத்துடன் பிரதான வியாபாரி கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் 880 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் ஒரு தொகைப் பணத்துடன் பிரதான வியாபாரி ஒருவர் நேற்று (27) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸாக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதைத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜே.எம்.துசிதகுமார தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிறைந்துரைச்சேனை பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.

இதற்கமைய பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் இருந்து 37 வயதுடைய ஹெரோயின் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து 880 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளும், ஒரு இலட்சத்து அறுபதாயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நிலையிலும் ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரம் இடம்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத செயல்கள் இடம்பெற்று வரும் நிலையில், போதைப் பொருள் பாவனையினை இல்லாமல் செய்வதற்காக வாழைச்சேனை பிரதேசத்திற்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.சி.என்.ஜயசுந்தர வழிகாட்டலில் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்

No comments:

Post a Comment

Post Bottom Ad