யாழில் வாள் வெட்டு குழு அட்டகாசம் - கார், வீட்டின் கதவு, ஐன்னல்கள் சேதம்! - News View

Breaking

Post Top Ad

Friday, October 16, 2020

யாழில் வாள் வெட்டு குழு அட்டகாசம் - கார், வீட்டின் கதவு, ஐன்னல்கள் சேதம்!

யாழ். கோண்டாவில் கிழக்கு - அரசடி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது வாள் வெட்டு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

நேற்று (16) இரவு 8.30 மணி அளவில் இரு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் நுழைந்த வாள் வெட்டு கும்பல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

தாக்குதலில் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும், வீட்டின் கதவு, ஐன்னல்களும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad