ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பணிகள் இடைநிறுத்தம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 28, 2020

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பணிகள் இடைநிறுத்தம்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி பெறும் நடவடிக்கைகளை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் புவனேக ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், எதிர்வரும் 31 ஆம் திகதி மீண்டும் ஆணைக்குழு கூடி சாட்சி பெறும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் தினங்களில் சாட்சி வழங்கவிருந்த அனைத்து தரப்பினருக்கும் இது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் புவனேக ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ செயற்பாட்டு காலத்தை எதிர்வரும் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad