இலங்கைக்கு பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்களை அவுஸ்திரேலியா வழங்கியது - News View

Breaking

Post Top Ad

Sunday, October 18, 2020

இலங்கைக்கு பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்களை அவுஸ்திரேலியா வழங்கியது

அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறை மற்றும் அவுஸ்திரேலிய உள்துறை திணைக்களம் இணைந்து 4 PCR பரிசோதனை இயந்திரங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இலங்கை கடற்படையினரிடம் இந்த கருவிகள் வழங்கப்பட்டன.

அதன்படி அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறையால் 2 PCR இயந்திரங்களும் அவுஸ்திரேலிய உள்துறை திணைக்களத்தால் 2 PCR பரிசோதனை இயந்திரங்களும் கடற்படைக்கு வழங்கப்பட்டன.

இந்த PCR இயந்திரங்கள் ஒரே நேரத்தில் 4 மாதிரிகள் சோதனை செய்வதற்கான திறன் கொண்டுள்ளது.

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குரூப் கெப்டன் ஷொன் அன்வின் வழங்கிய PCR பரிசோதனை இயந்திரங்கள், கடற்படை சார்பில் கடற்படை நடவடிக்கைப் பணிப்பாளர் பிரசன்ன மஹவித்தன பொறுப்பேற்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad