இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கையால் நாடு வல்லரசுகளின் விளையாட்டு மைதானமாகிவிட்டது - ஜே.வி.பி. - News View

Breaking

Post Top Ad

Sunday, October 18, 2020

இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கையால் நாடு வல்லரசுகளின் விளையாட்டு மைதானமாகிவிட்டது - ஜே.வி.பி.

இலங்கை அரசாங்கத்தின் கொள்கை காரணமாக நாடு சர்வதேச வல்லரசுகளின் விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது என ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது.

வெளியுலக சக்திகளின் செல்வாக்கு காரணமாக நாட்டின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் ஜே.வி.பி. தெரிவித்துள்ளது..

ஜே.வி.பி.யின் தலைமை செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நாடுகள் கூடிய விரைவில் இலங்கையை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சீன உயர்மட்ட குழுவினர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை புறக்கணித்தமை இதற்கான சிறந்த உதாரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் ஐக்கிய நாடுகளும் இலங்கையை தங்கள் செல்வாக்கிற்கு உட்படுத்த முயல்கின்றன என குறிப்பிட்டுள்ள டில்வின் சில்வா அரசாங்கத்தின் நடவடிக்கையால் நாட்டின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad