மதுகமவில் 3 மாத குழந்தை மற்றும் தாய்க்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Thursday, October 29, 2020

மதுகமவில் 3 மாத குழந்தை மற்றும் தாய்க்கு கொரோனா

மதுகம வலல்லாவிட பிரதேசத்தில் மூன்று மாத சிசு ஒன்றுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வலல்லாவிட, மாகலன்தாவ பிரதேசத்தை சேர்ந்த சிசு ஒன்றுக்கே இவ்வாறு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வலல்லாவிட பொது சுகாதார பரிசோதகர் திலகரத்ன அதுகோரால தெரிவித்தார்.

குறித்த சிசுவின் தாய்க்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த சிசு மற்றும் தாய் சிகிச்சைக்காக கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad