எந்த விதமான எதிர்ப்பு வெளியிடப்பட்டாலும் 20வது திருத்தம் நிறைவேற்றப்படுவது உறுதி - பிரதமர் மகிந்த ராஜபக்ச - News View

Breaking

Post Top Ad

Sunday, October 18, 2020

எந்த விதமான எதிர்ப்பு வெளியிடப்பட்டாலும் 20வது திருத்தம் நிறைவேற்றப்படுவது உறுதி - பிரதமர் மகிந்த ராஜபக்ச

எந்த தரப்பிலிருந்தும் எந்த விதமான எதிர்ப்பு வெளியிடப்பட்டாலும் 20வது திருத்தத்தை நிறைவேற்றுவது குறித்து உறுதியாகவுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எந்த தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பு வந்தாலும் நாங்கள் அரசமைப்பு திருத்தத்தை நாடாளுமன்றத்தில் உரிய முறையில் சமர்ப்பித்து அது ஒருமுற்போக்கான சட்டமாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வோம் என அவர் சண்டே ஐலண்டிற்கு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலரே 20வது திருத்தம் குறித்து எதிர்ப்பு வெளியிடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் எவருக்கும் தங்கள் கருத்தினை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் நிச்சயமாக 20வது திருத்தம் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வோம் என பிரதமர் தெரிவித்துள்ளார். அது குறித்து எந்த சந்தேகமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக உருவாகியுள்ள கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைள் மூலம் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழலில் மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் ஆபத்தினை கட்டுப்படுப்படுத்தவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மக்கள் ஆதரவை வழங்குகின்றனர் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad