நியூசிலாந்து பொதுத் தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அமோக வெற்றி - 120 ஆசனங்களில் 64 ஆசனங்களை ஆளும் கட்சி கைப்பற்றியது - News View

Breaking

Post Top Ad

Saturday, October 17, 2020

நியூசிலாந்து பொதுத் தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அமோக வெற்றி - 120 ஆசனங்களில் 64 ஆசனங்களை ஆளும் கட்சி கைப்பற்றியது

நியூசிலாந்து பொதுத் தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

நியூசிலாந்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த செப்டம்பர் 19 ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த பொதுத் தேர்தல் 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. தள்ளிவைக்கப்பட்டிருந்த தேர்தல் ஒக்டோபர் 17 ஆம் திதி (இன்று) நடைபெற்றது.

இந்த தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சியும், பிரதான எதிர்க் கட்சியான தேசிய கட்சி நேரடியாக எதிர்கொண்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன.

இதில், ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பிரஜைகள் தமது வாக்கினை பதிவு செய்தனர்.

அதில், பிரதமர் ஜெசிந்தாவின் ஆளும் தொழிலாளர் கட்சி 49 சதவிகித வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றது. பிரதான எதிர்க் கட்சியான தேசிய கட்சி 27 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது. 

நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 ஆசனங்களில் 64 ஆசனங்களை ஜெசிதாவின் ஆளும் கட்சி கைப்பற்றியது. இதன் மூலம் நியூசிலாந்து தேர்தலில் ஜெசிந்தா ஆர்டெர்ன் மகத்தான வெற்றியை பெற்றுள்ளார். 

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டன் இரண்டாவது முறையாகப் பதவி ஏற்க உள்ளார்.

வெற்றி குறித்து ஜெசிந்தா கூறும்போது, அடுத்த மூன்று ஆண்டுகளில் செய்ய நிறைய பணிகள் உள்ளன. கொரோனா நெருக்கடியிலிருந்து நாட்டை மீண்டும் நாம் சிறப்பாக கட்டமைப்போம். கொரோனாவில் மீள்தல், செயல்களை வேகப்படுத்துதளில் நாங்கள் உறுதியாக உள்ளோம்’ என கூறி உள்ளார். 

தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக தேர்வாகியுள்ள ஜெசிந்தாவுக்கு உலகின் பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் ஆர்டெர்னின் ஜெசிந்தா நியூசிலாந்தில் கொரோனா பரவலை சிறப்பாக கட்டுப்படுத்தி உலக நாடுகளின் பாராட்டை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று ஒழிப்பை வெற்றிகரமாக முன்னெடுத்ததால், இம்முறை தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் வெற்றி பெறுவார் என ஏற்கனவே கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

நியூசிலாந்தில் கலப்பு உறுப்பினர் விகிதாசார பாராளுமன்ற முறை 1996 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், முதன்முறையாக கட்சியொன்று பெருமளவான ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad