இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 8, 2020

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி |  Virakesari.lk
கொவிட்-19 தொற்று நோயால் வீழ்ச்சியடைந்த இலங்கையின் சுற்றுலாத் துறையை உயர்த்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் 4.9 மில்லியன் யூரோவை நிதியுதவியை வழங்க முடிவு செய்துள்ளது. 

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபிக்கும் சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்குமிடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது மிக விரைவில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், விரைவில் இந்த நிதியுதவி கிடைக்கும் என்று சைபி உறுதியளித்துள்ளார். 

சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக ஏழு முக்கிய பகுதிகளுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும். 

பயண வழிகாட்டுதல்கள், உடற்பயிற்சி சுற்றுப் பயணங்கள், சுற்றுலாத் துறையில் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு உதவுதல், தொழிலில் ஈடுபடுவோரின் சுகாதாரம் மற்றும் பயிற்சி, சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் சமூக அடிப்படையிலான சுற்றுலாத் துறையின் முன்னேற்றம் ஆகியவை இதில் அடங்கும்.

No comments:

Post a Comment