நாடு முழுவதும் கடும் காற்று வீசும் - மழை இன்றும் அதிகரிக்கும் வாய்ப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, September 6, 2020

நாடு முழுவதும் கடும் காற்று வீசும் - மழை இன்றும் அதிகரிக்கும் வாய்ப்பு

சமகளம் கடும் காற்று வீசும் : அனர்த்தங்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை - Page  227 of 910 - சமகளம்
நாடு முழுவதும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு காற்றின் வேகம் மணிக்கு 50 - 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்துக் காணப்படலாம் என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் நாட்டைச் சூழவுள்ள ஆழமற்ற மற்றும் ஆழமான கடல் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாகவும், இதனால் கடல் கொந்தளிப்பாக காணப்படலாம் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்றும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 - 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தென் திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. 

இன்று (06) பெந்தோட்டை, மீகம, தொடம்பபிட்டிய, பெலவத்தை, போதகம மற்றும் கதிர்காமம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.09 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment