நலன்புரி நிலைய மக்களின் எதிர்காலம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸின் இணைப்புச் செயலாளர் எடுத்துரைப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, September 14, 2020

நலன்புரி நிலைய மக்களின் எதிர்காலம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸின் இணைப்புச் செயலாளர் எடுத்துரைப்பு

கடந்த முப்பது வருடங்களாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களின் மீள்குடியேற்றம் விரைவுபடுத்தல், அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படல் போன்றவற்றின் அவசியம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பு செயலாளரினால் எடுத்துரைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை இன்று மேற்கொண்ட கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த அவர்களிடம் அமைச்ரின் இணைப்புச் செயலாளரினால் குறித்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டன.

இன்றைய யாழ் விஜயத்தின் போது, சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்திற்கு விஜயத்தினை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர், 1990 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக மயிலிட்டி மற்றும் தையிட்டி பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து 30 வருடங்களாக நலன்புரி நிலையத்தில் வசித்து வருகின்றன மக்களை பார்வையிட்டு அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

இதன்போது தங்களுடைய சொந்த காணிகளில் சென்று வாழ்வதற்கு எற்பாடுகளை செய்து தருமாறு மக்கள் இராஜாங்க அமைச்சரிடம் தெரிவித்தனர்.

அதனையடுத்து, மயிலிட்டி வடக்கு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் இந்திக்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்புச் செயலாளர் அடங்கிய குழுவினர் குறத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வீட்டுத் திட்டத்தினையும் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad