நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமையவே பிரேமலால் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தார் - கெஹெலிய - News View

Breaking

Post Top Ad

Thursday, September 17, 2020

நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமையவே பிரேமலால் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தார் - கெஹெலிய

(நா.தனுஜா) 

கொலைக் குற்றம் என்பது எப்போதும் மகிழ்ச்சிக்குரிய விடயமோ அல்லது வரவேற்கப்பட வேண்டிய விடயமோ அல்ல. எனினும் பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள முடியும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு அமைவாகவே அவர் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தார் என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். 

அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. 

இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த கொலைக் குற்றவாளியான பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு சபாநாயகர் அனுமதித்தமை தொடர்பில் முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad