அமைச்சர் டக்ளஸின் முயற்சியினால் மீனவர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள் நீக்கப்பட்டன - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 16, 2020

அமைச்சர் டக்ளஸின் முயற்சியினால் மீனவர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள் நீக்கப்பட்டன

அரியாலை தொடக்கம் கோவிலாக்கண்டி வரையான கடற்பரப்பில் நாட்டப்பட்டிருந்த பனை குற்றிகள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் இன்று (16.09.2020) அகற்றப்பட்டுள்ளன.

யுத்த காலத்தில் இராணுவத்தினரால் பாதுகாப்புக் காரணங்களுக்காக குறித்த கடற் பிரதேசத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான பனைக் குற்றிகள் நாட்டப்பட்டன.

அவை இதுவரை அகற்றப்படாத நிலையில் மீனவர்களின் தொழில் நடவடிக்ஙைகளுக்கு இடைஞ்சலாக காணப்பட்டன.

இந்நிலையில், அண்மையில் ஆய்வுப் பணிகளுக்காக குறித்த பிரதேசத்திற்கு சென்ற களப்பு அபிவிருத்தி திட்ட அதிகாரிகளின் ஆலோசைனைக்கு அமைய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சிகளையடுத்து இராணுவத்தினரால் குறித்த பனைக் குற்றிகள் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Bottom Ad