முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் எச்.எம்.எம். ஹரீஸின் ஏற்பாட்டில் தலைவர் தின நிகழ்வு - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 15, 2020

முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் எச்.எம்.எம். ஹரீஸின் ஏற்பாட்டில் தலைவர் தின நிகழ்வு

நூருல் ஹுதா உமர் 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 20வது நினைவு தினத்தை முன்னிட்டு நினைவுப் பேருரையும் கத்தமுல் குர்ஆனும் துஆப் பிரார்த்தனையும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் கல்முனைக் காரியாலயத்தில் இன்று (16) புதன்கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற்றது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.அப்துல் மஜீத் (முழக்கம் மஜீட்) கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். 

மேலும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்கள் தலைவர்கள், மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், உலமாக்கள், ஹாபிழ்கள், கட்சியின் போராளிகள் என பலரும் கலந்து கொண்டு மறைந்த தலைவரின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காக விசேட துஆப் பிரார்த்தனை செய்தனர். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் காரியாலயமானது கடந்த 30 வருடங்களாக மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் காலத்திலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை பிராந்திய காரியாலயமாக இயங்கிவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad