ஹரின் பெர்னாண்டோவின் தந்தை தொடர்பில் வெளியான தகவல்! - News View

Breaking

Post Top Ad

Thursday, September 17, 2020

ஹரின் பெர்னாண்டோவின் தந்தை தொடர்பில் வெளியான தகவல்!

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் தந்தை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியுடன் தொலைபேசியில் உரையாடல் ஒன்றை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஹரின் பெர்னாண்டோவின் தந்தை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியிடம் தனது தனிப்பட்ட தொலைபேசி மூலமாக 356 விநாடிகள் தாக்குதல் நடந்ததற்கு முதல்நாள் பேசியதாக ஆணையகத்துக்கு அரச சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். 

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல் அச்சம் உள்ளதாகவும் அதனால் உயிர்த்த ஞாயிறு ஆராதனை நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டாம் என தனது தந்தை எச்சரித்தாக ஹரின் பெர்னாண்டோ தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பின்னர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளித்த ஹரின் பெர்னாண்டோ, தாக்குதல் நேரத்தில் மருத்துவமனையில் இருந்த தனது தந்தை தாக்குதலுக்கு முன்னர் தனது சகோதரிக்கு இதைத் தெரிவித்ததாகவும், தாக்குதல்களுக்குப் பிறகு அவரது சகோதரியால் இது குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.

வீரகேசரி

No comments:

Post a Comment

Post Bottom Ad