முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வருக்காக முத்திரை வெளியிட வேண்டும் - சம்மேளன தேசிய பொதுச் செயலாளர் அஹ்மத் முனவ்வர் வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 17, 2020

முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வருக்காக முத்திரை வெளியிட வேண்டும் - சம்மேளன தேசிய பொதுச் செயலாளர் அஹ்மத் முனவ்வர் வேண்டுகோள்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எம்.அஸ்வரின் நினைவாக முத்திரை வெளியிட வேண்டுமென அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் சம்மேளன தேசிய பொதுச் செயலாளரும் முன்னாள் முஸ்லிம் சேவை பணியாளருமான எம்.இஸட். அஹ்மத் முனவ்வர் வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.

மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரின் மூன்றாவது நினைவு தினத்தை முன்னிட்டு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் சம்மேளனம் ஏற்பாடு செய்த நினைவுச் சொற்பொழிவும் அவர் நினைவாக புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் அண்மையில் சம்மேளன தலைமையகத்தில் நடைபெற்றது.

சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் தலைவரும் முன்னாள் தூதுவருமான ஒமர் காமில் நிகழ்வில் பிரதம சொற்பொழிவாளராகக் கலந்து கொண்டார்.

சம்மேளனத்தின் தலைவர் லுக்மான் சஹாப்தீன் தலைமையிலும் முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் எம்.இஸட்.எம்.அஹ்மத் முனவ்வரின் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மர்ஹும் அஸ்வர் பாராளுமன்ற உறுப்பினராக, பிரதி அமைச்சராக, ராஜாங்க அமைச்சராக மற்றும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் ஊடக அமைச்சில் ஒம்புட்ஸ்மனாக (குறைகள் அதிகாரி) இருந்தார். அப்படியெல்லாம் பதவி வகித்த அவர், மறைந்த முன்னாள் தலைவர்களான சேர். ராசிக் பரீட், பதியுதீன் மஹ்மூத், எம்.எச்.எம்.அஷ்ரப், ஏ.ஸீ.எஸ்.ஹமீத், பாகீர் மாகார், டாக்டர் கலீல் போன்ற பெருந் தலைவர்களுக்கெல்லாம் முத்திரை போடுவதில் அந்தந்த காலப்பகுதியில் முன்னின்று பாடுபட்டார்.

தற்போது ஆட்சி அமைத்திருக்கின்ற மஹிந்த ராஜபக்ஷவுக்காக அஸ்வர், மரணிக்கும் வரை விரும்பிப் போராடினார். அவருடைய காலம் அவர் யாருடைய அரசு ஆட்சி அமைக்க வேண்டும் என்று போராடினாரோ அவ்வரசு தற்போது ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் துரதிர்ஷ்டசம் அதைப் பார்ப்பதற்கு அஸ்வர் தற்போது இல்லை.
எனவே, முன்னாள் அமைச்சர் மர்ஹும் அஸ்வருக்கு நாங்கள் செய்யும் கௌரவம் அவர் பெயரில் முத்திரை வெளியீடுவதற்கு, அவர் விரும்பி ஆதரித்த இவ்வரசாங்கத்திடம், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனமும் சேர். ராசிக் பரீட் உருவாக்கிய

சோனக இஸ்லாமிய கலாசார நிலையமும் இணைந்து மர்ஹும் அஸ்வருக்காக முத்திரை வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்க வேண்டும் என்று வினயமாக கேட்டுக் கொண்டார்.

ஓராண்டுக்குள் அவருக்காக முத்திரை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த இந்நிகழ்வில் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் என்.எம். அமீனின் ஏற்பாட்டிலும் பலஸ்தீன் தூதரகத்தின் அனுசரணையிலும் உயர்தரம் பயிலும் வறிய மாணவர்கள் 6 பேருக்கு அஸ்வர் நினைவாக புலமைப் பரிசில் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment