ஹோட்டலை விமர்சித்தவர் சிறைத் தண்டனைக்கு முகம்கொடுக்கும் நிலை - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 30, 2020

ஹோட்டலை விமர்சித்தவர் சிறைத் தண்டனைக்கு முகம்கொடுக்கும் நிலை

தான் தங்கி இருந்த ஹோட்டல் ஒன்று பற்றி இணையத்தளத்தில் பாதகமாக விமர்சித்த அமெரிக்கர் ஒருவர் தாய்லாந்தில் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைக்கு முகம்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தாய்லாந்தில் உள்ள கடுமையான அவதூறு எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வொஸ்லி பார்ன்ஸ் என்ற அந்த அமெரிக்கர் மீது குறித்த ஹோட்டல் வழக்குத் தொடுத்துள்ளது. 

தாய்லாந்தில் பணி புரியும் பார்ன்ஸ் பல்வேறு இணையத்தளங்களிலும் மோசமான விமர்சனங்களை வெளியிட்டிருப்பதோடு அந்த ஹோட்டல் நவீன கால அடிமைத்தனம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமது முன்னாள் விருந்தினரின் இந்தக் கடுமையான விமர்சனத்தால் தமது ஹோட்டலின் புகழுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அந்தக் கடற்கரையோர ஹோட்டல் குறிப்பிட்டுள்ளது. 

ஹோட்டல் மீது நியாயமற்ற விமர்சனங்களை பதிவிட்டதாகவே ஹோட்டல் உரிமையாளர் வழக்குத் தொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சில நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பார்ன்ஸ், பின்னர் பிணையில் விடுதலையானார்.

எனினும் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad