டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பங்குச்சந்தையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார் - News View

Breaking

Post Top Ad

Thursday, September 17, 2020

டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு பங்குச்சந்தையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார்

(இராஜதுரை ஹஷான்) 

கொழும்பு பங்குச்சந்தை மற்றும் இலங்கை பத்திரங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு இணைந்து கொழும்பு பங்குச்சந்தையின் நடவடிக்கைகளை நவீனமயப்படுத்திள்ளது. 

கொழும்பு பங்குச்சந்தை டிஜிட்டல் மயப்படுத்தப்படுவதன் ஊடாக எதிர்காலத்தில் இலங்கை உலகளாவிய நிதி மூலஸ்தானமாக நிறுவப்படும். பங்குச்சந்தையின் நடவடிக்கைளை டிஜிடல்மயப்படுத்தும் நிகழ்வு இன்று கொழும்பு பங்குச்சந்தை வளாகத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார். 

'எதிர்காலத்திற்கான ஒரு பாய்ச்சல்' என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பு பங்குச்சந்தை நவீனமயப்படுத்தப்பட்டது. அங்கு நினைவு குறிப்பொன்றை முன்வைத்த பிரதமர் கொழும்பு பங்குச்சந்தையினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இணையத்தளத்தை இணையத்தில் வெளியிட்டார். 

டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டதன் ஊடாக புதிய முதலீட்டாளர்களுக்கு கிளை காரியாலயங்களுக்கு செல்லாது மத்திய வைப்பொன்றை ஆரம்பித்துக் கொள்ளலாம். 

கொழும்பு பங்கு பரிவர்த்தனை கையடக்க தொலைபேசி பாவனையின் ஊடாக நாடளாவிய ரீதியில் உள்ள முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தை அல்லது தரகு நிறுவனங்களை நாடாது. 

கணக்குகளை ஆரம்பிப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் புதிய முதலீட்டாளர்களுக்கு பங்கு கொடுக்கல் வாங்கல்களுக்கு தடையாக விளங்கிய தொலைதூரம் என்ற விடயம் இல்லாது போகும். 

டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்துடன் பெருந்திரளான தகவல்களை உள்ளடக்கி கொழும்பு பங்கு பரிவர்த்தனை மத்திய வைப்பு சேவைகள் அமைப்பு ஆகியவற்றின் இணையத்தளம் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது. 

அதன் மூலம் முதலீடு, கல்வி, நிதி, எழுத்தறிவு என்பவற்றை இலக்காக கொண்டு இலங்கை பத்திரங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிமுகப்படுத்தும் யூடியூப் சேனலும் வெளியிடப்பட்டது. 

கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் கையடக்க தொலைபேசி பாவனையின் நவீன பதிப்பின் ஊடாக கணக்குகளை ஆரம்பிக்கக் கூடியதுடன் சந்தை கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளல் மற்றும் அந்த கணக்கை விரும்பிய இடத்திலிருந்து விரும்பிய நேரத்தில் இலகுவாக பரிசீலிப்பதற்கு வசதிகள் காணப்படுகின்றன. 

கொழும்பு பங்குச்சந்தை டிஜிட்டல் மயப்படுத்தப்படுவதன் ஊடாக எதிர்காலத்தில் இலங்கை உலகளாவிய நிதி மூலஸ்தானமாக நிறுவப்படும். 

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான அஜித் நிவாட் கப்ரால், ஷெஹான் சேமசிங்க, லொஹான் ரத்வத்தே, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல, இலங்கை பத்திரங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி விராஜ் தயாரத்ன, பணிப்பாளர் நாயகம் சிந்தக மெண்டிஸ் மற்றும் இலங்கைக்கான வெளிநாட்டு தூதரங்களில் இருந்து வருகை தந்த அதிதிகள், தரகு நிறுவனங்கள், பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் இலங்கை வர்த்தக சமூகத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad