சத்தியப்பிரமாணம் அரசியலமைப்புக்கு முரணானதல்ல - சபாநாயகர் சபையில் தெரிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 8, 2020

சத்தியப்பிரமாணம் அரசியலமைப்புக்கு முரணானதல்ல - சபாநாயகர் சபையில் தெரிவிப்பு

சத்தியப்பிரமாணம் அரசியலமைப்புக்கு முரணானதல்ல-Premlal Jayasekara Sworn-Constitutional-Speaker Mahinda Yapa Abeywardena
மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள்ள சகல உரிமையும் உள்ளது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் தெரிவித்தார்.

இன்றையதினம் (08) பாராளுமன்றத்தில் ஆளும்கட்சி எம்பியாக பிரேமலால் ஜயசேகர சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதையடுத்து எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே சபாநாயகர் இதனைத் தெரிவித்தார்.

சபாநாயகர் இதன்போது அரசியலமைப்பின் குறித்த சரத்தை சபையில் வாசித்துக் காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல உட்பட பலரும் பிரேமலால் ஜயசேகரவின் சத்தியப்பிரமாணம் முறையற்றது என தெரிவித்து அது அரசியலமைப்புக்கு முரணானது என்றும் வாதிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்)

No comments:

Post a Comment

Post Bottom Ad