மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் விபத்து : இரு இளைஞர்கள் பலி, பஸ் வண்டி மீது தாக்குதல் - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 1, 2020

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் விபத்து : இரு இளைஞர்கள் பலி, பஸ் வண்டி மீது தாக்குதல்

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில், தாளங்குடா சமுர்த்தி வங்கிக்கு முன்பாக இடம்பெற்ற பாரிய வீதி விபத்துச் சம்பவத்தில், இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக, காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இவ்விபத்துச் சம்பவம் நேற்றிரவு (01) 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த சொகுசு பஸ் வண்டியுடன், அதே திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் புதுக்குடியிருப்பு காளி கோயில் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய எஸ்.டிலுக்சன், 22 வயதுடைய நிலுக்சன் ஆகியோரே பலியாகியுள்ளதாக, காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.

இவ்விபத்துச் சம்பவத்தையடுத்து, குறித்த பஸ் வண்டி மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் பஸ் பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளது.

உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் சடலங்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.

சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிசார், ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன், பஸ் வண்டியின் சாரதியை கைது செய்துள்ளனர்.

பஸ்ஸின் அதிக வேகமே இவ்விபத்துக்கு காரணமெனத் தெரியவருகின்றது. இச்சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(எம்.எஸ்.எம். நூர்தீன், வ.சக்திவேல்)

No comments:

Post a Comment

Post Bottom Ad