கொரோனா அதிவேகமாக பரவும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முன்னிலை - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 2, 2020

கொரோனா அதிவேகமாக பரவும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முன்னிலை

ITC| Buy | Target price Rs 195-200 | Stop loss Rs 145 - 7 top money making  ideas for next few weeks | The Economic Times
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 61 லட்சத்தை கடந்தது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் \ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 61 லட்சத்து 69 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 357 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 48 ஆயிரத்து 632 பேருக்கும், அமெரிக்காவில் 40 ஆயிரத்து 899 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 61 லட்சத்து 69 ஆயிரத்து 212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்
அமெரிக்கா - 62,90,425
பிரேசில் - 40,01,422
இந்தியா - 37,69,524 
ரஷியா - 10,05,000
பெரு - 6,63,437
கொலம்பியா - 6,33,339
தென் ஆப்பிரிக்கா - 6,30,595
மெக்சிகோ - 6,06,036
ஸ்பெயின் - 4,79,554
அர்ஜெண்டினா - 4,39,172

No comments:

Post a Comment

Post Bottom Ad