முன்னாள் அமைச்சர்களான ரிஷாத், கிரியெல்லவிடம் நேற்று வாக்குமூலம் பதிவு - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 15, 2020

முன்னாள் அமைச்சர்களான ரிஷாத், கிரியெல்லவிடம் நேற்று வாக்குமூலம் பதிவு

முன்னாள் அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன் மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் வாக்குமூலம் வழங்குவதற்காக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று ஆஜராகியிருந்தனர்.

ஜனாதிபதி ஆணைக்குழுவால் இருவருக்கும் விடுக்கப்பட்டிருந்த அழைப்பின் பேரிலேயே வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்றுக் காலை 9.30 மணியளவில் ஆஜராகியிருந்தனர்.

ரிஷாட் பதியுதீன் நேற்றுமுன்தினமும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கிய பின்புலத்திலேயே நேற்றும் வாக்குமூலமளித்திருந்தார்.

அத்துடன், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வு சேவை பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன ஆகியோரும் நேற்றுமுன்தினமும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜயராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad