ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, September 17, 2020

ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

சாட்சியங்களை மறைத்த மற்றும் மாற்றியமைத்த குற்றச்சாட்டில் கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்களை எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்கள் இன்று (17) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இவ்விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்தன சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக பல நபர்களை பயன்படுத்தி சாட்சிகளை உருவாக்கியமை தொடர்பில் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad