மீஸானின் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர்களான எம்.எச்.எம். அஸ்ரப், அன்வர் இஸ்மாயிலுக்கான நினைவு தின நிகழ்வுகள் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 17, 2020

மீஸானின் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர்களான எம்.எச்.எம். அஸ்ரப், அன்வர் இஸ்மாயிலுக்கான நினைவு தின நிகழ்வுகள்

மறைந்த முன்னாள் அமைச்சர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகர் எம்.எச்.எம். அஸ்ரப் மற்றும் எம்.ஐ.எம். அன்வர் இஸ்மாயில் ஆகியோர்களின் நினைவாக நினைவு பேருரையும் துஆ பிராத்தனையும் அல்- மீசான் பௌண்டஷன் - ஸ்ரீலங்காவின் கல்முனை செயற்குழுவின் ஏற்பாட்டில் இணைப்பாளர் ஏ.ஆர்.ஏ. ஜௌசானின் தலைமையில் கல்முனை ஜாமிஆ மன்பயில் ஹிதாயா அரபுக் கல்லூரியில்புதன்கிழமை (16) மாலை நடைபெற்றது.

மறைந்த முன்னாள் அமைச்சர்களான எம்.எச்.எம். அஸ்ரப் மற்றும் எம்.ஐ.எம். அன்வர் இஸ்மாயில் ஆகியோர்கள் முஸ்லிம் சமூகத்து செய்த சேவைகள், அவர்களின் இழப்பினால் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சமகால அரசியலில் முஸ்லிங்களின் நிலைகள் தொடர்பில் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த பார்ட்னர்ஸ் போ சலன்ச் இண்டர்னசனல் நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சி திட்ட ஆலோசகர் றிசாத் செரிஃப் நினைவு பேருரை நிகழ்த்தினார்.

ஜாமிஆ மன்பயில் ஹிதாயா அரபுக் கல்லூரி மாணவர்களினால் குரான் ஓதி தமாம் செய்யப்பட்டதுடன் மறைந்த அமைச்சர்களுக்காகவும் மற்றும் நாட்டின் ஒற்றுமை,சுபீட்சம் என்பன ஓங்கவும் துஆ பிரார்த்தனை நடைபெற்றது. இந்நிகழ்வில் அல்- மீசான் பௌண்டஷன்- ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.என்.ஹுதா உமர் கௌரவ அதிதியாகவும், அல்- மீசான் பௌண்டஷன்- ஸ்ரீலங்காவின் சமூக சேவைகள் பிரிவு தலைவர் ஏ.சி.எம்.நிஸார், மற்றும் மாளிகைக்காடு, சாய்ந்தமருது, சம்மாந்துறை, கல்முனை, மருதமுனை பிரதேச செயற்குழுவின் முக்கியஸ்தர்கள், உலமாக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நூறுல் ஹூதா உமர்

No comments:

Post a Comment