அரசாங்கத்தை நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை - சுயதொழில் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் கலாநிதி ஜனகன்...! - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 30, 2020

அரசாங்கத்தை நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை - சுயதொழில் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் கலாநிதி ஜனகன்...!

(றிஸ்கான் முகம்மட்)

குறைந்தது ஒரு வருட காலத்திற்குள் 1000 பேருக்கு சுயதொழில் மூலம் என்னால் வருமானம் வழங்க முடிந்திருக்கின்றது. ஆகவே அரசாங்கத்தை நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என  கலாநிதி வி.ஜனகன் தெரிவித்தார்.

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு சுயதொழில் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

“ஆரா” எனும் ஊதுபத்தி உற்பத்தியை ஆரம்பித்து வைப்பதன் மூலம் அதனால் வரும் வருமானமாத்தினால் பெண்கள் வீட்டுத் தலைவியாக இருக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் நன்மை அடையவுள்ளன. அத்துடன், இதன்மூலம் கிடைக்கப் பெறும் வருமானம் ஜனகன் பவுன்டேஷன் மூலமாக மக்களுக்கான நலத்திட்டத்திற்காகவும், பயன்படுத்தப்படவுள்ளது. கலாநிதி வி.ஜனகனின் “சகலருக்கும் வேலை வாய்ப்பு” என்ற எண்ணக்கருவுக்கு அமைய ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இத்திட்டத்தின் மூலம் கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் சகல குடும்பங்களும் நன்மையடைய உள்ளன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மக்களுக்காக “ஜனகன்” பவுண்டேஷன் மூலமாக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு திட்டம்தான் இது. இதேபோல் பல்வேறு திட்டங்களை நான் உருவாக்கியிருக்கின்றேன்.

ஒவ்வொரு திட்டங்களிலும் வீட்டுத் தலைவியாக பெண்கள் இருக்கும், வருமானத்தை இழந்த குடும்பங்கள் நன்மை அடையும் விதத்தில் சுயதொழிலை உருவாக்கி அதன் மூலம் அவர்களின் நாளாந்த வருமானத்தை ஈட்டும் விடயங்களை செயற்படுத்தி வருகிறேன். உங்களுடைய வருமானத்தை பெருக்கிக் கொள்வது உங்களது கைகளில்தான் இருக்கிறது. 

ஆகவே, என்னுடைய இந்த திட்டங்களுக்கு நீங்கள் சரியான முறையில் ஒத்துழைப்புகளை வழங்கினால் வீட்டிலிருந்தே உங்கள் வருமானத்தை ஏற்படுத்தி கொள்ள முடியும். மத வேறுபாடின்றி “வாங்குகின்ற கையை கொடுக்கும் கையாக மாற்றுவேன்”.

எனவே, எனது நிறுவனமும் நானும் முழு ஒத்துழைப்பை இந்த திட்டங்களுக்காக வழங்குவோம் என்று உங்களுக்கு உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்று கலாநிதி ஜனகன் தெரிவித்தார்.

அத்துடன், இந்த வேலை திட்டத்தை ஆரம்பித்து வைத்தமைக்காக கூம்பிகல மக்கள் தமது நன்றிகளை கலாநிதி வி. ஜனகனுக்கு இங்கு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment