மருதமுனையின் முதலாவது பெண் கலாநிதி ஆனார் முஹம்மட் மஜீத் மஷ்ரூபா - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 15, 2020

மருதமுனையின் முதலாவது பெண் கலாநிதி ஆனார் முஹம்மட் மஜீத் மஷ்ரூபா

நூருல் ஹுதா உமர்

மருதமுனையைச் சேர்ந்த முஹம்மட் மஜீத் மஷ்ரூபா மலேசியா முகாமைத்துவ விஞ்ஞான பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் கற்கை தொடர்பான ஆய்வினை நிறைவு செய்து கலாநிதி பட்டத்தினை பெற்றுள்ளார். 

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞான பட்டதாரியான இவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமாவையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் நூலக விஞ்ஞான முதுகலைமாணியினையும் நிறைவு செய்துள்ளார்

வெலிங்டன் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் தகவல் எழுத்தறிவும் தகவல் தொழிநுட்பமும் தொடர்பான பயிற்சி நெறியினையும்,இந்தியாவில் இலத்திரனியல் வள முகாமை தொடர்பான பயிற்சி நெறியினையும் நிறைவு செய்துள்ள முஹம்மட் மஜீத் மஷ்ரூபா இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 23 வருடங்களாக கல்விசார் சேவையை சிறப்பாக வழங்கி வருகிறார்.

இவர் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் மர்ஹும் ஏ.எச்.எம். மஜீத் அவர்களின் புதல்வியும், பிரபல உயிரியல் விஞ்ஞான பாட சிரேஷ்ட ஆசிரியர் எம்.ஐ.நூறுல் ஹமீம் அவர்களின் பாரியாருமாவார். இவர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகரும் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவியுமாவார்.

No comments:

Post a Comment