சந்தனமடு ஆற்றில் ஆணின் சடலம், அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் வேண்டுகோள் - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 16, 2020

சந்தனமடு ஆற்றில் ஆணின் சடலம், அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் வேண்டுகோள்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சந்தனமடு ஆற்றில் மீட்கப்பட்ட வயோதிபரான ஆணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு ஏறாவூர் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சந்தனமடு ஆற்றில் புதன்கிழமை 16.09.2020 பிற்பகல் ஆணின் சடலமொன்று மிதந்த நிலையில் கிடப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து தலத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உடற் கூறாய்வுபக் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள அந்தச் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளார்கள்.

விவரம் தெரிந்தோர் 065 2240487 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்க முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad