மட்டக்களப்பில் முதலாவது மேற்பார்வை பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் நியமனம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 15, 2020

மட்டக்களப்பில் முதலாவது மேற்பார்வை பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் நியமனம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பில் முதலாவது மேற்பார்வை பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தராக ஆர். பாஸ்கரன் கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் இடம்பெற்ற முதலாவது மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநரால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பதவி உயர்வினைப் பொறுப்பேற்பதோடு இந்தப் பதவியை மக்களுக்கு பொறுப்புக் கூறும் வகையில் பொறுப்புடையதாகக் கருதி பதவி வகித்தல் வேண்டும் என்பதுடன் இந்தப் பதவியின் கடமைகளை நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி வினைத்திறனுடனும் தளராத ஊக்கத்துடனும் செயலாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுவதாக மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.வை. சலீம் நியமனக் கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார்.

மேற்பார்வை பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தருக்கு விஷே‪ட கடமைப் பொறுப்புக்கள் உள்ளதாக நியமன நியதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad