கம்பளையில் இரகசியமாக கேரளா கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Monday, September 7, 2020

கம்பளையில் இரகசியமாக கேரளா கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

கம்பளையில் கேரள கஞ்சா மீட்பு | NEO Media
கண்டி, கம்பளை பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று 06.09.2020 மாலை போதைப் பொருள் பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கேரளா கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த இருவருடன், 40 இற்க்கு மேற்பட்ட கேரளா கஞ்சாக் கட்டுகளையும் மற்றும் பக்கட் செய்ய வைத்து இருந்த கேரளா கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றினர்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது குறித்த நபர்கள் நீண்ட நாட்களாக இரகசியமாக கேரளா கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரளா கஞ்சா பக்கட் ஒன்று ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததாக கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டி நிருபர் ராஜ்

No comments:

Post a Comment

Post Bottom Ad