சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 8, 2020

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு - 8 பேர் கைது
நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் எல்பட கீழ்பிரிவு தோட்ட வெளிகள உத்தியோகத்தரின் விடுதிக்கு அருகாமையில் மற்றும் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கிளை ஆறு ஒன்றிலும் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 8 பேர் ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளனர்.

இன்று (08) விடியற்காலை இரண்டு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் நீண்ட காலமாக இடம்பெற்று வந்த இந்த சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு தொடர்பில் ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட எட்டு சந்தேக நபர்களும் பலாங்கொட, பொகவந்தலாவ, நோர்வுட் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களென ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மாணிக்ககல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட கால்வாயில் இருந்து தோட்ட வெளிகள உத்தியோகத்தரின் விடுதிக்குள் பாரிய சுரங்க குழிகளை ஏற்படுத்தியிருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்த விடுதிக்கு அருகாமையில் தொடரும் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் விடுதியின் சுற்றுபுரம் முழுவதும் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு சரிந்து விழும் ஆபாயத்தில் கானப்படுகிறது

கைது செய்யப்பட்ட எட்டு சந்தேக நபர்களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

மலையக நிருபர் சதீஸ்குமார்

No comments:

Post a Comment