இணையத்தள மோசடி தொடர்பில் 71 விசாரணைகள் முன்னெடுப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 8, 2020

இணையத்தள மோசடி தொடர்பில் 71 விசாரணைகள் முன்னெடுப்பு

நாட்டில் அதிகரிக்கும் இணையத்தள மோசடிகள்; விசாரணைகள் ஆரம்பம்
(எம்.மனோசித்ரா) 

நாட்டில் இணையத்தளம் அல்லது சமூக வலைத்தளங்கள் மூலம் இடம்பெறும் மோசடிகள் அதிகரித்துள்ளன. இந்த வருடத்தில் மாத்திரம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் இணையத்தள மோசடி தொடர்பில் 71 விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

பொதுமக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பினைப் பெற்றுத்தருவதாகக் கூறி இடம்பெற்ற மோசடி தொடர்பில் 14 முறைப்பாடுகளும், மோட்டார் சைக்கள் அல்லது லொத்தர் சீட்டிலுப்பு மூலம் பரிசு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்து மக்களை ஏமாற்றியமை தொடர்பில் 28 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. 

இவற்றில் மோட்டர் சைக்கிள் அல்லது வேறு ஏதேனும் பரிசு பொருள் கிடைத்துள்ளதாக கூறி இடம்பெற்ற 4 மோசடிகள் மற்றும் லொத்தர் பரிசு கிடைத்துள்ளதாக கூறி இடம்பெற்ற 20 மோசடிகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad