5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கினார் பிள்ளையான் - News View

Breaking

Post Top Ad

Thursday, September 3, 2020

5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கினார் பிள்ளையான்

பிள்ளையான் அமைச்சராகிறார்? - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்
வாக்குமூலம் வழங்குவதற்காக, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகிய பிள்ளையான் என அழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

சுமார் 5 மணித்தியாலங்களாக குறித்த ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

பொலிஸ் பிரிவில் ஆஜராகிய பிள்ளையானிடம் மாலை 3 மணி வரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து கொழும்பிற்கு நேற்று (02) அழைத்துவரப்பட்டார்.

வெலிக்கடை சிறைச்சாலையின் வைத்தியசாலையில் அவர் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad