இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 1,379 கிலோ கிராம் மஞ்சளுடன் ஒருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 8, 2020

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 1,379 கிலோ கிராம் மஞ்சளுடன் ஒருவர் கைது

மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (07) மாலை மன்னார் சாந்திபுரம் பிரதான வீதியில் வைத்து 1,379 கிலோ 960 கிராம் மஞ்சளுடன் மன்னார் பகுதியை சேர்ந்த ஒருவரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக, மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிருஸாந்தன் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் குறித்த மஞ்சளை மீட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டு நீர்கொழும்பு பிரதேசத்திற்கு வாகன மொன்றில் கடத்தி செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது மன்னார், சாந்திபுரன் பகுதியில் வைத்து நேற்று சந்தேகத்திற்கு இடமான குறித்த வாகனத்தை சோதனையிட்ட பொலிஸார், உப்பு பைக்கட்டுகளுக்கு மத்தியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மஞ்சள் மூடைகளை கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட மஞ்சள் 1,379 கிலோ 960 கிராம் என மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய சந்தே நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(மன்னார் நிருபர் -எஸ்.றொசேரியன் லெம்பேட்)

No comments:

Post a Comment

Post Bottom Ad