மாத்தளை மாவட்டத்தில் மஞ்சள் தூள் அதிக விலைக்கு விற்பனை - News View

Breaking

Post Top Ad

Thursday, August 27, 2020

மாத்தளை மாவட்டத்தில் மஞ்சள் தூள் அதிக விலைக்கு விற்பனை

ஒரு கிலோ மஞ்சள் தூளுக்கான அதிகபட்ச சில்லறை விலை ரூபா எழுநூற்று ஐம்பது ரூபாய் என அரசாங்கம் அறிவித்திருந்த பொழுதிலும் தம்புள்ள, மாத்தளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் ஒரு கிலோ மஞ்சள் தூள் ரூ .7,000 க்கும் அதிகமாக விற்கப்படுவதாக தெரியவருகிறது.

மேலும் இவ்வாறு விற்கப்படுகின்ற பல மஞ்சள் பொடிகள் தரமற்றவை என்றும் பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர். மத்திய பிரதேசத்தின் தம்புள்ள, மாத்தளை, ரத்தோட்டை, லக்கலை மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலேயே இவ்வாறு அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரியவருகிறது.

சில கடைகளில் மஞ்சள் தூள் கிலோவுக்கு ரூ. 3,000 முதல் மொத்த விலையிலும், கிராமப்புறங்களில் உள்ள கடைகளிலும் ஒரு கிலோ மஞ்சள் தூளின் சில்லறை விலை ரூ .7,000 தாண்டப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் இது தொடர்பில் பொதுமக்களினால் மாத்தளை நுகர்வோர் விவகார சபைக்கு அறிவித்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

பல வியாபாரிகள் மஞ்சள் தூள் மற்றும் மஞ்சள் துண்டுகளை சேமித்து வைத்து அதிக விலைக்கு நுட்பமாக விற்க முயற்சிக்கின்றனர் எனவும் சில பிரதேசங்களில். பிற பொருட்கள் வாங்கப்பட்டால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட அளவு மஞ்சள் தூள் விற்பனை செய்யப்படுவதாகவும் அறியமுடிகின்றது. ஆகவே இது குறித்து சமந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

(எம்.ஏ.அமீனுல்லா)

No comments:

Post a Comment

Post Bottom Ad