கிளிநொச்சி விபத்தில் விஷேட அதிரடிப்படை வீரர் ஒருவர் பலி - ஒருவர் படுகாயம் - News View

Breaking

Post Top Ad

Saturday, August 29, 2020

கிளிநொச்சி விபத்தில் விஷேட அதிரடிப்படை வீரர் ஒருவர் பலி - ஒருவர் படுகாயம்

கிளிநொச்சியில் இன்று மாலை 4.00 மணியளவில் ஏ-9 வீதி 155 கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் விஷேட அதிரடிப் படையினைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கிளிநொச்சி நகர் பகுதியில் இருந்து இரண்டு டிப்பர் வாகனங்கள் 155 ஆம் கட்டை சந்தி பகுதியிருந்து பாரதிபுரம் திரும்பும் வேலையில் விசேட அதிரடிப் படையினர் முகாமிலிருந்து வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதுண்டதில் சம்பவ இடத்திலே ஒருவர் பலியானதோடு ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இல 55, படிநெகுடுவாவ, மயில்கஸ்வொவ சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய தனபாலகே ரோஷன் பிரதீப் (பி.சி 87958) பலியாகியுள்ளார்.

கிளிநொச்சி நகர் பகுதியில் இருந்து வந்த டிப்பர் வாகன சாரதியின் அசமந்தப் போக்கில் திருப்பியபோது விசேட அதிரடிப் படையினர் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் பாரதிபுரம் பக்கம் திருப்பிய டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு பின்னால் வந்த டிப்பர் வாகனம் விசேட அதிரடிப் படையினரும் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றவர் படுகாயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகன சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிவையில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்

No comments:

Post a Comment

Post Bottom Ad