ஆசியாவின் அதிசய நாடாக அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் இலங்கை மாறிவிடும் - இராதாகிருஸ்ணன் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 2, 2020

ஆசியாவின் அதிசய நாடாக அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் இலங்கை மாறிவிடும் - இராதாகிருஸ்ணன்

கோட்டாவின் ஆயிரம் ரூபா சம்பளம் ஒரு ...
அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாத இந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக் கொள்வதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றது. அந்த பெரும்பான்மை கிடைத்தால் ஆசியாவின் அதிசய நாடாக அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் இலங்கை மாறிவிடும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவையில் இன்று (02) நடைபெற்ற இறுதி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசும் பொழுது தெரிவித்துள்ளார்.

இன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இலங்கை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு அதிகரித்திருக்கின்றது. மஞ்சள் ஒரு கிலோ 6000.00 ரூபா, உழுந்து ஒரு கிலோ 1200.00 ரூபா, செமன் 280.00 ரூபா இப்படி பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்கின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் எந்த ஒரு திட்டமும் இல்லை.

ஆனால் இந்த தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுத் தருமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்கின்றது. மக்கள் நலன்சார்ந்த எந்த ஒரு விடயத்திலும் அக்கறை செலுத்தாத இந்த அரசாங்கம் மக்களிடம் வாக்கு கேட்பது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

ஆரசாங்கம் மக்களின் நலனையும் அவர்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்கின்ற வகையில் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காக செயற்படுமாக இருந்தால் அந்த அரசாங்கம் தேவையில்லை. இதனை நாங்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலின் பொழுது தெளிவாக எடுத்துக் கூறினோம். ஆனால் அதனை மக்கள் கேட்கவில்லை. இன்று பொருட்களின் விலை அதிகரித்தவுடன் அரசாங்கத்தை குறை கூறுகின்றார்கள். எனவே இந்த தேர்தலில் சிந்தித்து வாக்களிக்காவிட்டால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும்.

இன்று சர்வதேசம் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளது. அதற்கு காரணம் அரசாங்கத்தின் முக்கிய பல பதவிகளில் ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இது ஒரு நல்ல விடயம் அல்ல. எனவே இந்த தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெற்றால் இன்னும் இந்த நாட்டின் நிலைமை மிகவும் மோசமாவதற்கு வாய்ப்பிருக்கின்றது. எனவே மக்கள் சிந்திக்க வேண்டும். என்றார்.

மலையக நிருபர் தியாகு

No comments:

Post a Comment