குடியிருப்பு ஒன்றில் தீ - உடமைகள் எறிந்து நாசம் - News View

Breaking

Post Top Ad

Friday, August 28, 2020

குடியிருப்பு ஒன்றில் தீ - உடமைகள் எறிந்து நாசம்

குடியிருப்பு ஒன்றில் தீ - உடமைகள் எறிந்து நாசம்
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் விஜிராபுற பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (28) பிற்பகல் 2.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்றிருந்த வேலை குறித்த வீட்டில் தீ பரவியதாகவும் வீட்டில் இருந்த உடமைகள் எறிந்து நாசமாகியுள்ளதாகவும் எவருக்கும் எவ்வித காயங்களோ உயிர் சேதங்களோ ஏற்படவில்லையெனவும் மின்சார கோளாலாறு காரணமாகவே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

மலையக நிருபர் சதீஸ்குமார்

No comments:

Post a Comment

Post Bottom Ad