114 கிலோ கிராம் மஞ்சள் கட்டை மற்றும் 261 கிலோ கிராம் ஏலக்காயுடன் ஒருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Sunday, August 9, 2020

114 கிலோ கிராம் மஞ்சள் கட்டை மற்றும் 261 கிலோ கிராம் ஏலக்காயுடன் ஒருவர் கைது

வாக்குச்சீட்டை படம் எடுத்த கல்வி ...
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட ஒரு தொகை மஞ்சள் மற்றும் ஏலக்கா என்பனவற்றுடன் ஒருவர் நேற்று சனிக்கிழமை (08) கற்பிட்டி கடற்படையினரால் கற்பிட்டி ஆணவாசல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கற்பிட்டி கடற்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, 20 இலட்சம் ரூபா பெறுமதியுடைய 114 கிலோ கிராம் மஞ்சள் கட்டை மற்றும் 261 கிலோ கிராம் ஏலக்கா என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த மஞ்சள் மற்றும் ஏலக்கா என்பன விற்பனை செய்யும் நோக்கில் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இயந்திரப் படகு மூலம் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இயந்திரப் படகுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலக்கா என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad