மக்களை வெளியேற்றி சகல சமுதாயங்களையும் பாதிக்கும் காணியற்ற நிலைமையினை உருவாக்குவதற்கு தொல்பொருள் அடிப்படையிலான நியாயப்படுத்தல்களைத் தவறாகப் பயன்படுத்துவது இலங்கையில் ஒரு பரிச்சயமான போக்காகக் காணப்படுகின்றது - பார்ள் நிறுவனம் அறிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, July 26, 2020

மக்களை வெளியேற்றி சகல சமுதாயங்களையும் பாதிக்கும் காணியற்ற நிலைமையினை உருவாக்குவதற்கு தொல்பொருள் அடிப்படையிலான நியாயப்படுத்தல்களைத் தவறாகப் பயன்படுத்துவது இலங்கையில் ஒரு பரிச்சயமான போக்காகக் காணப்படுகின்றது - பார்ள் நிறுவனம் அறிக்கை

HOME - PARL
ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மக்களை வெளியேற்றி சகல சமுதாயங்களையும் பாதிக்கும் காணியற்ற நிலைமையினை உருவாக்குவதற்கு தொல்பொருள் அடிப்படையிலான நியாயப்படுத்தல்களைத் தவறாகப் பயன்படுத்துவது இலங்கையில் ஒரு பரிச்சயமான போக்காகக் காணப்படுவதாக காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மரபுரிமை முகாமைத்துவத்திற்கான ஜனாதிபதி செயலணி செயலணி குறித்து காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினால் Peoples’ Alliance for Right to Land (PARL) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அந்த கிழக்கு மாகாண செயலணியினை உருவாக்கியமை நிறைவேற்று அதிகாரத்தினைச் சட்ட உரிமையின்றிப் பயன்படுத்தியமையாகும் என்பதுடன் இது ஜனநாயக நிறுவனங்களைப் புறக்கணிக்கின்ற செயலுமாகும்.

அரச நிறுவனங்கள் எதிர்நோக்கும் குறைபாடுகள் அல்லது சவால்கள் பொது நிறுவனங்களுக்கு இயலுமான நிலைமைகளை உருவாக்குவதன் மூலம் தீர்க்கப்படவேண்டுமேயன்றி அவற்றினை தேவைக்கு மேற்பட்டதாக ஆக்குவதால் தீர்க்கப்படலாகாது.

தொல்பொருள் அடிப்படையிலான நியாயப்படுத்தல்களைத் தவறாகப் பயன்படுத்துவது இலங்கையில் ஒரு பரிச்சயமான போக்காகக் காணப்படும் பல சந்தர்ப்பங்களை PARL ஆவணப்படுத்தியுள்ளது. 

விசேடமாக இந்தத தேர்தல் பிரச்சாரக் காலத்தில் அமைதியின்மையினை உருவாக்கிச் சிறுபான்மைச் சமுதாயங்களை அச்சுறுத்தி அற்ப அரசியல் இலாபம் தேடுவது சகல இலங்கையர்களினாலும் எதிர்க்கப்படவேண்டியதொன்றாகும்.

காணி ஆளுகை நிர்வாகம் நியாயமானதாகவும் நீதியானதாகவும் இருக்கவேண்டும்.

நமது நிறுவனத்தினால் நாடு முழுவதும் நடத்தப்பட்ட பரந்த கலந்தாலோசிப்பினைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட மக்களின் காணி பொலிஸ் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை PARL  நினைவுபடுத்துகின்றது:

பரிந்துரை
சிறுபான்மைச் சமுதாயங்கள் வரலாற்று ரீதியாகப் பயன்படுத்திவரும் காணிகளில் இருந்து அவர்கள் பிரிக்கப்படலாகாது.

சிறுபான்மையினரை இடம்பெயர்ப்பதற்காக காட்டுயிர்களைப் பாதுகாத்தல் என்றும் வனப்போர்வையினைப் பாதுகாத்தல் என்றும் போலியான தொல்லியல் சான்றுகளைக் காட்டுவது நிறுத்தப்படவேண்டும்.

இனத்துவ சமயப் பன்மைவாதத்தினை நிலைகுலையச் செய்கின்ற காணி மீதான தனியுரிமைக் கோரிக்கைகளை வலுப்படுத்துவதற்;காகத் தொல்லியலும் வரலாறும் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை நிறுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழ்கின்ற சிறுபான்மைச் சமுதாயங்களின் சமூக, கலாசார அரசியல் சகவாழ்விற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தொல்பொருள் வரலாறு சூழ்ச்சித் திறனுடன் கையாளப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

செயலணி பொது நிதியினை வீணடித்து, செய்த வேலையினையே மீண்டும் செய்வித்து, இலங்;கையின் தொல்பொருள் அபிவிருத்தியினுள் அரசியல் பக்கச்சார்பினை ஏற்படுத்துகின்றது.

தொல்பொருள் போன்ற விடயங்களை இராணுவமயமாக்குவதன் அபாயம் என்னவென்றால் இது தொழில்வாண்மையினைச சீர்குலைத்து ஏற்கெனவே இப்பரப்பில் இயங்கிவரும் அரச நிறுவனங்களின் தகைமையினைக் கீழறுக்கின்றது.

முறையற்ற ஓர் அமைப்பாகவும் நாடாளுமன்ற மேற்பார்வையின்றியும் இருக்கும்.

இச்செயலணி அதன் தீர்மானங்களினால் பாதிக்கப்படுகின்ற இலங்கையர்களின் மனதில் சந்தேகத்தினை உருவாக்கும்.

செயலணியில் பெண்களின் பிரதிநிதித்துவமோ அல்லது இனத்துவ சமயச் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவமோ இல்லை.

மேலும் கிழக்கு மாகாணத்திலுள்ள இராணுவத்தினால் ஏற்கெனவே கடுமையான துயரங்களுக்கு முகங்கொடுத்து அச்சுறுத்தல் நிலைமைகளுக்கு ஆளாகிவரும் மக்கள் சமுதாயத்தினருக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தச் செயலணி பங்களிப்பு வழங்கவில்லை. மாறாக எதிர்மாற்றமானதையே செய்கின்றது.

செயலணியின் உறுப்பாண்மையினை நோக்குகையில் சிறுபான்மையினரின் நலன்களைக் காவுகொடுத்து சிங்கள பௌத்த நலன்களை முன்னுரிமைப்படுத்துகின்றமையினையே அது சுட்டிநிற்கின்றது.

செயலணியில் இராணுவத்தினையும் சட்ட அமலாக்கல் அதிகாரிகளையும் உள்ளடக்கியுள்ளமை, செயலணியின் தற்றுணிபு தேவையெனக் கருதுகையில் ஆயத வன்முறையினைப் பயன்படுத்தச் சட்டரீதியாக ஆணை வழங்கப்பட்டுள்ள இரண்டு நிறுவனங்கள் இச்செயலணியின் காலடியில் சேவைசெய்யக் காத்திருக்கின்றன எனும் செய்தியினை வழங்குகின்றது.
Image may contain: text that says "சுருக்கக் குறிப்பும் கருத்துரையும் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மரபுரிமை முகாமைத்துவத்திற்கான ஜனாதிபதி செயலணி திகதிய இலக்க ரபுரிமைக்கான வர்த்தமானி அறிவித்தல் செயலணியினை' வழங்கப்பட் டுள்ளது? ருவாக்குவதற்கு 'ஜனாதிட ஜனாதிபதிக்கு அதிகாரம் நிறைவேற்ற அதிகாரங்களைக் குறித்துரைக்கின்றது. குறிப்பிடுகின்றது: அரசியலமைப்பினை கௌரவித்துப் ற்றிப்பிடித்தல், நல்லிணக்கம் ஒருமைப்பாட்டினை மேம்படுத்தல், அரசியலமைப்புக் சுயாதீன நிறுவனங்களின் செயற்பாட் வசதிப்படுத்தல், ஆணைக்குழுவிற்கு ஆலோசனை தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான றுதிப்படுத்தல், சாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தினைப் பாராளுமன்றத்தில் வெளியிடல், பாராளுமன்றத்தின் வைபவர்தியான அமர்வுகளுக்குத் தலைமைதா ராளுமன்றத்தினைக் ஒத்திவைத்தல் கலைத்தல், தூதுவர்கள் உயர்ஸ்தானிகர்களை ஏற்றுக்கொள்ளல், அங்கீகரித்தல் தியமித்தல். சுதந்திரமானதும் நீதியானதுமான நிலைமைகள் உருவாக்கப்படுவதை டத்தரணிகளை நியமித்தல், குடியரசின் முத்திரையினை வைத்திருத்தல், யுத்தத்தினையும் சமாதானத்தினையும் டுத்தல், அரசியலமைப்புட் தவையான அவ்வாறான செயற்பாடுகளையும் நிறைவேற்றல். பிடயங்களையும் ஆணைக்குழுவின விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவினை ருவாக்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமுண்டு. எவ்வாறாயினும், 'ஜனாதிபதி செயலணிக்காக' அவ்வாறான"
Image may contain: text that says "அரசியலமைப்புடன் ஒத்திசையும் அவ்வாறான செயற்பாடுகளையும் நிறைவேற்றல் அரசியலமைப்பின் ப்புரையான பரந்த தங்கியுள்ளார் என்று ஒருவரினால் வர்த்தமானியில் காரணங்கள் இலங்கையின் வரலாற்றினைக் கொண்டுள்ளமையும் தனித்துவத்திற்கான மூலமாகும். இயற்கையின் டவடிக்கையினாலும் மனிதர்களின் நடவடிக்கையினாலும் பராம்பரியம் பாதுகாத்தல் தொல்பெ ாருள் இவ்வாறான ரீதியாகவும் சமவாயங்களில் ரீதியாகவும் அதிகாரங்களை வர்த்தமானி பின்வருமாறு கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் பரிக்கின்றது; பேணுவதற்குப் பொருத்தமான தலங்களை மூலம் தொல்பொருள் பாரம்பரியத்தினைப் அமுல்படுத்தல். தலங்களுக்கு ஒதுக்குவதற்கு காணியின் இலங்கையின் தனித்துவத்தினை உள்நாட்டிலும் அவ்வாறான மேம்படுத்துவதற்காகப் பரிந்துரைகளை பாதுகாத்து பின்வருவனவற்றினையும் வர்த்தமானி மேலதிகமாகக் குறிப்பிடுகின்றது: விசாரணைகளை த்தியோகத்தர்களுக்கும் ஏனைய நபர்களுக்கும் அறிவுறுத்தல்களை செயலணியின் அறிவுறுத்தல்களுக்கு உறுதிப்படுத்த, வர்த்தமானி அவ்வாறான நபர்களும் வேண்டுகோள்களுக்கு துறிப்பிடுகின்றது: அரசாங்க அறிவுறுத்தல்களுக்குச் இயைபுறவேண்டும். தியோகத்தர்களும் ஏனையோரும் சாத்தியமான த்தியோகத்தர்களும் திணைக்களங்களினதும் தவிகளையும் கூட்டுத்தாபனங்களினதும் அரசாங்கத்"
Image may contain: text that says "நிறுவனத்தினதும் உத்தியோகத்தர் இடம்பெறின் செயலணியின் தாமதங்கள் முறைப்பாடு ப்பாண்மை செயலணியின் சிவிலியன் ங்குகின்றார் ஜெனரலான அமைச்சின் பிரதிநிதித்துவம் அனைத்து சேர்ந்தவர்கள். பின்புலத்தினைச் றுப்பினர்களுள் சமயமும் பிரதிநிதித்துவம் ஆணையாளரும் தொல்பொருள் தலைவரும் பணிப்பாளர் றுப்பினராக கருத்துரைகள் டிஜஜியும் ங்குகின்றனர். கருதப்படும் தெரன செயலணியும் கொண்டுள்ள நிதியினை வீணடித்து, வேலையினையே மீண்டும் செய்வித்து இலங்கையி தொல்பொருள் அபிவிருத்தியினுள் சீர்குலைத்து ஏற்கனவே தொழில்வாண்மையினைச் பாராளுமன்ற தீர்மானங்க சந்தேகத்திலை ருவாக்கும் தன்னிச்சைய வையாகவும் செயலணியின் நடவடிக்கைகள் அவை அநீதியாகத் செயற்பாடுகள் கலந்தாலோசிப்பு அற்றவையாகவும் ப்படுகின்றது செயலணியில் ருவாக்கவில்லை, கடுமையான இனத்துவ செயலணியின் மாகாணத்திலுள்ள இராணுவத்தினால் ஏற்கனவே அச்சுறுத்தல் சமுதாயத்தினருக்கிடையில் செய்கின்றது)."
Image may contain: text that says "மாகாணத்திலே இனத்துவ மாகரணம் யிலும் சமய சனத்தொகைப் அரசியல், ஒதுக்கீடுகள், மானுடட் இருக்கின்றன. இனத்துவ பிரதேசங்களில் பாருளாதாரத் சிக்கந்தன்மைகளையும் அவர்களின் தொல்பொருள் மாடே மிதித்த நலன்களையும் வண்டுமென்றே பனையேறி அவர்களின் அபிவிருத்திக்கும் விழுந்தவனை உறுப்பாண்மையின் காரணமாகச் படுவதற்கான நலன்களைக் சிறுபான்மைச் சமுகாயங்கள் துருவமயமாதல் செயலணியில வழிகோலலாம். செயலணியின் வன்முறையினைப் யன்படுத்தச் நிறுவனங்கள் இச்செயலணியின் காலடியில் செய்தியினை வழங்குகின்றது. தேவையெனக் சேவைசெய்யக் காத்திருக்கின்றன உருவாக்கியமை நிறைவேற்று அதிகாரத்தினைச் சட்ட அவற்றினை தேவைக்கு உரிமையின்றிப் போக்காகக் ருவாக்கிச் சிறுபான்மை் ண்டுமேயன்றி மக்களை வெளியேற்றி வாக்குவதற்கு தால்பொருள் இலங்கையில் PARL இவ்வாறான இந்தத் தேர்தல் அச்சுறுத்தி அற்ப ஒன்றாகும். நியாயமானதாகவும் நீதியானதாகவும் இருக்கவேண்டும். தேடுவது நிர்வாகம்"
Image may contain: text that says "பரிந்துரைகள் முழுவதும் கலந்த மேற்கொள்ளப்பட் பரிந்துரை சிறுப அவர்கள் பாதுகாத்தல் காட்டுவது சமுதாய் வெளியிடப்பட்ட மக்களின் பரிந்துரைகளை PARL டுத்துகின்றது: வரலாற்று ரீதியாகப் வயினைப் டவேண்டும். பரிந்துரை படுத்திவ காணி களில் போலியான இனத்துவ சமயப் கோரிக்கைகளை குறிப்பிட்ட தொல்லியல் சூழ்ச்சித்திறனு அச்சுறுத்தல் கையாளப்ப நிலைகுலையச் செய்கின்ற காணி வரலாறும் அரசாங்கம் றுபான்மைச் ஏற்படுத்தும் வகையில் தொல்பொருள் மற்றும் இக்குறிப்பு காணிக்கான ரிமைக்கான மக்கள் மைப்பினால் (PARL) தயாரிக்கப்பட்ட மேலே வர்த்தமானி பற்றிய கருத்துரைகள் போது கிடைத்த தகவல்களை அடிப்படையாகக்"

No comments:

Post a Comment