போதைப் பொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கழுகு மீட்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, July 30, 2020

போதைப் பொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கழுகு மீட்பு

பாதாளக் குழுவொன்றின் தலைவராக கருதப்படும் அங்கொட லொக்காவினால், போதைப்பொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கழுகு ஒன்று, அத்துருகிரிய பொலிஸாரினால் இன்று (30) மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேல் மாகாண புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மீகொடை, நாவலமுல்ல, மயான வீதி பகுதியிலிருந்து குறித்த கழுகு மீட்கப்பட்டுள்ளது.

அத்தோடு, அங்கொட லொக்காவின் நண்பர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

'குச எலி முகுது உகுஸ்ஸா' என அழைக்கப்படும் குறித்த கடல் கழுகு, சுமார் 15 கிலோ கிராம் பாரத்தை சுமந்து செல்லும் ஆற்றல் கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வகையான கழுகுகளுக்கு, உத்தரவுகளுக்கு அமைய வேலை செய்வதற்கான பயிற்சி அளிக்க முடியும் என, வனஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad