நீதிபதி இளஞ்செழியனுக்கு குவியும் பாராட்டுக்கள் - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 29, 2020

நீதிபதி இளஞ்செழியனுக்கு குவியும் பாராட்டுக்கள்

வித்தியா படுகொலை வழக்கில்விஜயகலா ...
நீதிபதி இளஞ்செழியனின் மனிதாபிமான செயற்பாட்டைப் பாராட்டி தென்னிலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் நீதிபதி இளஞ்செழியனை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவரது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் அதிகாரி ஹேமசந்திர என்பவர் உயிரிழந்தார். இப்பொலிஸ் அதிகாரி தகனம் செய்யப்பட்ட தினத்தன்று அவரது பிள்ளைகள் இருவருக்கும் தான் தந்தையாக இருப்பேன் என நீதிபதி இளஞ்செழியன் வாக்குறுதி வழங்கியிருந்தார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் நீதிபதி, இம்முறையும் பொலிஸ் அதிகாரியின் நினைவுத்தினமான கடந்த 23ஆம் திகதி சிலாபத்திலுள்ள அன்னாரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

பிள்ளைகளின் கல்விக்கான தொடர்ந்தும் உதவிகளை மேற்கொண்டு வரும் நீதிபதி அவர்களது போக்குவரத்து வசதிக்காக ஸ்கூட்டர் ஒன்றையும் பொலிஸ் அதிகாரியின் மகளுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.

நீதிபதியின் மனிதாபிமான செயற்பாடு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருந்த நிலையில் சிங்கள ஊடகங்கள் அதனை பாராட்டி செய்திகளை வெளியிட்டுள்ளன. அந்த செய்தியில் “இப்படியான ஒரு சிறந்த மனிதன் நாட்டிற்கு கிடைத்த அதிஷ்டம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad