பாடசாலைகள் மூடப்பட்டதால் 7 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம் - News View

Breaking

Post Top Ad

Friday, July 31, 2020

பாடசாலைகள் மூடப்பட்டதால் 7 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம்

கொரோனா பாதிப்பு காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் ஐந்து மாதங்களாக பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் ஏழு ஆயிரம் மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் ஐந்து மாதங்களாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள இந்த நேரத்தில் 7000 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் பல மாணவிகள் வயது 10 இல் இருந்து 14 வயதுக்குள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த தகவலை அரசு அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் கொரோனா காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூட அரசாங்கம் உத்தரவிட்டது. இதன் பின்னரே மாணவிகள், சிறுமிகள் கருத்தரிப்பது அதிகரித்துள்ளது. பலோம்பே நகரில் மட்டும் இந்த காலக்கட்டத்தில் 1000 சிறுமிகள் கருத்தரித்துள்ளனர்.

கல்வி தொடர்பான சிவில் சொசைட்டி கூட்டணியின் இயக்குனர் பெனடிக்டோ கோண்டோவ் கூறுகையில், கொரோனா தொற்று நோய் நாட்டின் இளம் பெண்களின் வாழ்க்கையை மோசமாக பாதித்துள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில் பாலின அடிப்படையிலான வன்முறை, சுரண்டல் மற்றும் இளம் பருவ சிறுமிகளுக்கு எதிரான பிற வகையான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன என கவலை தெரிவித்துள்ளார்.

மாலவி நாட்டில் இதுவரை 3,700 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 100-க்கும் அதிகமானோர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

இதுபோல் கென்யா அதிகாரிகள், ஜூலை தொடக்கத்தில், கொரோனா ஊரடங்கின் போது சிறுமிகள் கர்ப்பம் தரிக்கும் எண்ணிக்கையில் அதிகரிப்பு உள்ளது என அறிவித்தனர். 

இதில் 150,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊர்டங்கின் மூன்று மாதங்களில், 152,000 கென்ய சிறுமிகள் கர்ப்பமாகிவிட்டனர், இது மாத சராசரியில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.

கென்யா உலகின் மிக அதிகமான சிறுமிகள் கர்ப்ப விகிதங்களில் ஒன்றாகும், இங்கு 1,000 பேரில் 82 சிறுமிகள் கர்ப்பம் தரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad