உங்களது உரிமையை நிலைநாட்ட அனைவரும் வாக்களிக்க வேண்டும் - பேராசிரியர் ரட்ண ஜீவன் கூல் - News View

About Us

Add+Banner

Friday, July 31, 2020

demo-image

உங்களது உரிமையை நிலைநாட்ட அனைவரும் வாக்களிக்க வேண்டும் - பேராசிரியர் ரட்ண ஜீவன் கூல்

1596187794-rathanajeevan-2
உங்களது உரிமையை நிலைநாட்ட அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ண ஜீவன் கூல் தெரிவித்தார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ​ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக மக்கள் வாக்களிப்பதற்கு தயங்குகிறார்கள் அல்லது பயப்படுகிறார்கள் என்ற நிலைமை காணப்படுகின்றது உண்மையில் மக்கள் இது தொடர்பில் அச்சப்பட தேவையில்லை.

நாங்கள் வாக்களிப்பின் போது கொரோனா தொற்று தடுப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம் எம்மைப் பொறுத்த வரைக்கும் ஏற்கனவே சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எவ்வாறு வாக்களிப்பினை மேற்கொள்வது தொடர்பாக மாதிரி வாக்களிப்பினை பரீட்சித்துப் பார்த்திருக்கிறோம்.

தேர்தல் தினத்தன்று வாக்கு சாவடியில் வாக்களிப்பின் போது கொரோனா தொற்றுஏற்படகூடிய சாத்தியக்கூறு குறைவானதாகவே இருக்கும் அதாவது நீங்கள் வீதியில் பயணிக்கும் போதோ அல்லது தங்களுடைய அன்றாட கடமைகளை செய்யும்போதோ கொரோனா தோற்று ஏற்படுகின்ற வாய்ப்பை விட வாக்களிப்பு நிலையத்திற்குள் தொற்று ஏற்படக்கூடிய சாத்தியக் கூறு மிகவும்குறைவாகவே காணப்படுகின்றது.

அத்தோடு நீங்கள் வாக்களிப்பு நிலையத்துக்குள் செல்லும் போது மாஸ்க் அணிந்து கைகளை கழுவி ஏனையோர் பாவித்த பேனைகளைபாவிக்காத வகையில் பல சுகாதார நடைமுறைகளை வாக்களிப்பு நிலையங்களில் மேற்கொண்டுள்ளோம்.

வீதிகளில் நடமாடும் போது ஏற்படும் தொற்றுக்குரிய வாய்ப்பினை விட வாக்களிப்பு நிலையத்தில் மிகவும் குறைவானது. எனவே உங்களுக்குரிய வாக்களிப்பு உரிமையை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

யாழ். நிருபர் சுமித்தி

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *