
சுற்றுலாத்துறையை மீட்கும் நடவடிக்கையாக எவரெஸ்ட் உள்ளிட்ட சிகரங்களை சுற்றுலாவுக்காக திறந்துள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.
இமய மலைத் தொடரில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் நாடான நேபாளத்தில் எவரெஸ்ட் உட்பட 14 உயர் சிகரங்கள் உள்ளன. இந்த சிகரங்களில் மலையேற்றம் பிரபலம்.
மலையேற்றம் மூலம் பல மில்லியன் டொலர் கணக்கில் வருவாய் மற்றும் வேலை வாய்ப்பை பெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் பாதிப்பை சந்தித்தது.
நேபாளத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 19,547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை.
இந்நிலையில் கடந்த வாரம் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, தற்போது சுற்றுலா நடவடிக்கைகளுக்காக சிகரங்கள் திறக்கப்படுவதாக சுற்றுலாத்துறை இயக்குனர் மீரா ஆச்சார்யா தெரிவித்துள்ளார். மேலும், இலையுதிர் காலத்தில் மலையேற்றத்திற்கு அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் இலையுதிர் காலம் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை ஆகும். வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எத்தனை நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும், பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து அதிகாரிகள் தயார் செய்து வருவதாகவும் மீரா தெரிவித்தார்.
No comments:
Post a Comment