4-வது முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் ’நெகட்டிவ்’ - கொரோனாவிலிருந்து குணமடைந்தார் பிரேசில் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Sunday, July 26, 2020

4-வது முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் ’நெகட்டிவ்’ - கொரோனாவிலிருந்து குணமடைந்தார் பிரேசில் ஜனாதிபதி

கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த பிரேசில் ஜனாதிபதி போல்சோனரோவுக்கு 4-வது முறையாக நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்ததையடுத்து அவர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தார்.

கொரோனா ஒரு சிறிய காய்ச்சல்தான் இதற்கு ஊரடங்கு, முகக் கவசம் என எதுவும் தேவையில்லை என கூறியவர் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சோனரோ. இவருக்கு கடந்த 10 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார். ஒரு வாரத்திற்கு மேலாக தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு கடந்த 15 ஆம் திகதி போல்சோனரோ 2-வது முறையாக கொரோனா பரிசோதனை செய்தார். அப்போதும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு விரைவில் மீண்டும் பரிசோதனை செய்வேன் என போல்சனேரோ கூறியிருந்தார்.

இதையடுத்து, கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதி போல்சனேரோ 3-வது முறையாக கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதிலும் அவருக்கு கொரோனா மீண்டும் உறுதியாகியிருந்தது.

இதனால், அவர் தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், தற்போதுதான் கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டதாக ஜனாதிபதி போல்சனேரோ தெரிவித்துள்ளார்.

4-வது முறை செய்துகொண்ட பரிசோதனையில் தனக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்துள்ளதாகவும், தான் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’’ அனைவருக்கும் வணக்கம்... கொரோனா வைரஸ் முடிவு ’நெகட்டிவ்’...’’ என தெரிவித்துள்ளார்.

கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டேன் என அவர் கூறினாலும், தான் எப்போது கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன் என்ற தகவலை ஜனாதிபதி தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது நாள் முதலே போல்சனேரோ ஹைட்ராக்சி குளோரக்குயின் மாத்திரைகளை எடுத்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment