மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை 11 நிபந்தனைகளுக்கு அமைய ஆரம்பிக்கலாம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Monday, July 6, 2020

மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை 11 நிபந்தனைகளுக்கு அமைய ஆரம்பிக்கலாம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை, 11 நிபந்தனைகளுக்கு அமைய இன்று (06) முதல் ஆரம்பிக்க முடியும் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்காக இன்று முதல் பல்கலைக்கழகங்களை திறப்பதற்கான தீர்மானத்தை எடுப்பதற்கு துணைவேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், அவர் தெரிவித்தார்.

குறித்த நிபந்தனைகள் வருமாறு...

ஒரு முறைக்கு பல்கலைக்கழகங்களுக்கு அழைக்கக் கூடியவர்கள் 2 வருடங்களைச் சேர்ந்த மாணவர்கள் மாத்திரமாகும். இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடங்களாயின் மிகவும் பொருத்தமானதாகும்.

விடுதி வசதிகளைக் கொண்டுள்ள மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு ஒரு அறை என்ற வீதம் வழங்கப்படுவது கட்டாயமானதாகும். விரிவுரை மண்டபங்களில் நடைமுறை வகுப்புக்கள், நூலகம் மற்றும் விரிவுரை மண்டபம் ஆகியவற்றில் ஒரு மீற்றர் இடைவெளியை முன்னெடுப்பது முக்கியமானதாகும்.

பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிக்கும் பொழுது விரிவுரை மற்றும் நடைமுறை வகுப்பை பூர்த்தி செய்து பரீட்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு முக்கிய இடம் வழங்கப்படவேண்டும்.

பரீட்சை நடத்தப்படுவதற்கு முன்னர் நடத்தப்படும் எத்தகைய கல்வி நடவடிக்கைகளுக்கான காலத்தை குறைத்து ஆகக்கூடிய வகையில் 4 வாரத்திற்கு மேற்படாதவாறு அமைய வேண்டும்.

இறுதி ஆண்டில் மருத்துவ பீட மாணவர்களுக்கு செய்முறைப்பயிற்சியை ஆரம்பிக்க முடிவதுடன் இதற்காக சம்பந்தப்பட்ட பீடங்களின் ஆலோசனைகள் வழங்கப்படமுடியும். பல் வைத்தியம் மற்றும் ஆயர்வேத இறுதி ஆண்டு மாணவர்களுக்கு செய்முறை பயிற்சியை ஆரம்பிக்க முடியும்.

கல்வி மற்றும் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து தமது வீடுகளுக்கு செல்ல வேண்டும்.

பல்கலைக்கழக வளாகத்தில் இரவு 7.00 மணிக்கு பின்னர் எந்த காரணத்தைக் கொண்டும் மாணவர்கள் இருக்கக்கூடாது.

விளையாட்டு, சமூக பணி அல்லது எத்தகைய ஒன்று கூடலுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

அனைத்து உப வேந்தர்களும் தமது தங்குமிடங்களில் உள்ள வசதிகள் தொடர்பாக கூடுதலான கவனம் செலுத்துவதுடன் ஒரு முறைக்கு பல்கலைக்கழகத்திற்கு அழைக்கக்கூடிய மாணவர் எண்ணிக்கை தொடர்பாக மதிப்பீடுகளை ஆரம்பித்த பின்னர் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும்.

உயர் கல்வி நிறுவனத்திற்காக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளை உள்ளடக்கிய சுற்றறிக்கை தொடர்ந்தும் செல்லுபடியானதாகும்.

பல்கலைக்கழகங்ளை சுமூகமாக முன்னெடுப்பதற்காக தேவைப்படும் கல்வி நடவடிக்கைகள், தேவையான பணியாளர்கள் குறித்த தீர்மானங்களை மேற்கொள்வதற்கான அதிகாரம் உபவேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment