அரவிந்த டி சில்வாவிடம் வாக்குமூலம் பதிவு - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 30, 2020

அரவிந்த டி சில்வாவிடம் வாக்குமூலம் பதிவு

இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா, விளையாட்டு தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் விசேட பொலிஸ் பிரிவில் முன்னிலையானார்.

வாக்குமூலம் பெறுவதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011 இல் இடம்பெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண இறுதிப் போட்டி பணத்திற்காக விட்டுக் கொடுக்கப்பட்டதாக, முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு முன்னிலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad