முஸ்லிம் லீக்கின் உதவித் தொகை இலங்கைக்கு வழங்கப்படவில்லை - குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மறுப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, June 28, 2020

முஸ்லிம் லீக்கின் உதவித் தொகை இலங்கைக்கு வழங்கப்படவில்லை - குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மறுப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முறையான தகவல் வழங்காமை காரணமாக வாக்களித்தவாறு 5 மில்லியன் அமெரிக்க டொலர் உலக முஸ்லிம் லீக் நிதி உதவியை இலங்கைக்கு வழங்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், இந்த நிதி உதவி தொடர்பாக உலக முஸ்லிம் லீக் செயலாளர் கலாநிதி ஷெய்க் மொஹமட் பின் அப்துல் கரீமிடம் எழுத்து மூலம் வினவிய போதே இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக 5 மில்லியன் டொலர் நிதி உதவி முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் வழங்கப்பட்டதாகவும் அந்த நிதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் ஊடகங்களில் குற்றஞ்சாட்டப்படுகிறது. இவற்றை தான் மறுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தாக்குதலில் இறந்தோர், இறந்தோரின் மதம், அவர்களின் பெயர்ப்பட்டியல், சேதமான சொத்துக்கள், அதனுடன் தொடர்புள்ள தகவல்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உதவி வழங்கல், வங்கிக் கணக்கு இலக்கங்கள் என்பன கோரப்பட்டிருந்தன. அவை வழங்கப்படவில்லை என முஸ்லிம் லீக் செயலாளர் அறிவித்திருந்தார்.

தற்போதைய பிரதமருடன் பேசி மதவிவகார அமைச்சருடன் நேரடியாக தொடர்புபடுத்தி தேவையான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க உள்ளதாகவும் அவரின் கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாக மைத்திரிபால சிறிசேன தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment