கடமைக்கப்பால் தம் திறமையை வெளிக்காட்டிய நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு பணப்பரிசு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 27, 2020

கடமைக்கப்பால் தம் திறமையை வெளிக்காட்டிய நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு பணப்பரிசு

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன கடமை நேரத்தில் தமது திறமையை சிறப்பாக செயல்படுத்திய நான்கு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவிலியன் ஒருவருக்கும் பணப்பரிசு உட்பட பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி வைத்துள்ளார். 

நேற்று மாலை பாதுகாப்பு அமைச்சின் பிரதான கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமதுயிரை துச்சமாக மதித்து மே மாதம் 31ஆம் திகதி கொத்மலை நீர்த்தேக்க நதியில் விழுந்த பெண் ஒருவரின் உயிரைக் காப்பாற்றும் வகையில் செயல்பட்ட தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் ருவான் பெர்னாண்டோ மற்றும் அதே பொலிஸ் நிலைய பொலிஸ் கான்ஸ்டபில் செல்வராஜ் காந்தரூபன் ஆகியோர் குறித்த பணப்பரிசினை பெற்றுள்ளனர்.

இதேவேளை 22 வயதுடைய பெண் ஒருவரின் உயிரை காப்பாற்றச் சென்ற வேளையில் உயிரிழந்த ஹாமிட் ரிஸ்வானின் மனைவி சிவன் மேரி தெரேசா குடும்பத்தினர் பெறுமதியான காசோலையை பெற்றுக்கொண்டனர்.

ஜூன் 9ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பற்ற 780,226 ரூபாய்கள் பெறுமதியான பணக்கொள்ளையடிப்பு சம்பவத்தின் போது தமது வீர தீர செயல்களை காண்பித் பிரதம பரிசோதகர் வருணி போகஹவத்த மற்றும் பொலிஸ் கான்ஸ்டபில் பீ ஜீ.எம்.பீ கருணாதிலக ஆகியோர் சான்றிதள்களும் பணப்பரிசிள்களும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை குறித்த பணக்கொள்ளையில் ஈடுபட்ட நபரை கைதுசெய்ய பொலிஸாருக்கு உதவி வழக்கியமைக்காக தேசிய வைத்தியசாலையின் சுகாதார் ஊழியர் டப்ளியூ.எ.பீ. பெர்னாண்டோ பணப்பரிசினையும் பெற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment